புகைப்படம் – த.அகிலன்
செஞ்சோலைக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும் போயிருந்தோம்.
எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோஅப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான்எப்படிப்படமெடுக்க வேண்டு மென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியைஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயது அக்கா சீ 7 வயது தாய். மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ நான் திணறிப்போனேன் ஏனோதொண்டை வற்றியது.
– தாயாய் சகோதரியாய் தோழியாய்… கட்டுரையில் இருந்து தொடர்பு கருதி.
வாசிக்கும் போதே கண்கள் கலங்கிவிட்டது..
[நீங்க பகி [ஊரோடி நண்பரா?]
இல்லை தூயா நான் சொன்ன பகீ ஊரோடி பகீ இல்லை. இவர் ஒரு புலம் பெயர்ந்து யேர்மனியில் வசித்த நண்பர்
அருமையான படம் அகிலன். அதற்கேற்ற தலைப்பும் கொடுத்த இருக்கின்றீர்கள். இதே போல் வேறு புகைப்படங்களும் இருந்தால் போடுங்கள் பார்ப்போம்.
இந்த அழகிய படத்துக்குப் பின் உள்ள ஆழ்ந்த சோகம்…வேதனை தருகிறது.
இரக்கம்
மனதை
இருக்கியது
நெஞ்சை
அடைத்தது
ஆத்திரத்தில்
நரம்புகள்
புடைத்தன
நன் முன்னோர்கள்
இது போன்ற காட்சிகளை எல்லாமா
நினைத்து பார்த்திருப்பார்கள்?
படம் வர்ணனை பதிவு மனதில் நின்றன.
நன்றி த.அகிலன்.
சிறந்த படம் அகிலன்!
வார்த்தைகள் வரவில்லை….