மொட்டை மாடியில்
காத்திருக்கிறேன்
நிலவாவது
வரட்டும் என்று…
கறுத்தக்கட்டிடங்களின்
மேலாக மிதந்து
கொண்டிருக்கிறது
தனிமை
ஒரு பறவையைப்போல..
கொடியில்
காயப்போட்ட
துணிகளில்
தொங்கிக் கிடக்கிறது
நினைவுகள்
தொலைவில்
தெரியும்
தொலைபேசிக் கோபுரததின்
சிவப்பு வெளிச்சங்கள்
ஒரு
அசரீரியைப்போல
திகிலூட்டும்
அறைமுழுதும்
நிரம்பிய புத்தகங்கள்
சிடீக்களில்
நிரப்பப்பட்ட இசை
எதுவுமே போதுவதில்லை
எரிந்து கொண்டிருக்கும்
தனிமையை
அணைக்க…
த.அகிலன்
“கறுத்தக்கட்டிடங்களின்
மேலாக மிதந்து
கொண்டிருக்கிறது
தனிமை
ஒரு பறவையைப்போல..”
தனிமையை சொல்லும் வார்த்தைகளில் வெகு சிறப்பாக கையாண்டிருக்கிறீர்கள்
பாராட்டுக்கள்
நல்லா இருக்கு அகிலன்..
//எதுவுமே போதுவதில்லை
எரிந்து கொண்டிருக்கும்
தனிமையை
அணைக்க…
//
உண்மை தான்…
தனிமையை மிகவும் அழகாக கவிதைப்படுத்தியிருக்கிறீர்கள் அகிலன்..பாராட்டுக்கள்.