01. காலம் ஒரு கொடியகனவாயிற்று உன் பிரியங்கள் என்னை மீளெழுப்பின உனது வார்தைகள் எனது காயங்களை ஆற்றின உன் பார்வைகள் தொலைந்து கொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்தன.. என்ன சொல்ல எனது சாம்பர் மேட்டிலிருந்து புதியமுளைகளை உருவாக்கும் உனது புன்னகைகளை என்னோடே விட்டுவிடு நான் பிழைத்துப் போகிறேன்… 02. நான் தயங்குகிறேன் மிகவும் உன் பிரியத்தின் சுவர்கள் கண்ணாடிகளால் ஆனவையாயிருக்கையில் கற்களை வீசிவிடக் கூடாதென்கிற தயக்கம்…
காதலை பிழிந்து கவிதை ரசம் எடுக்கிறீர்கள்.
அட.. அகிலன், இப்படிக்கூட எழுதுவீங்களா? அழகா இருக்கு 🙂