யாரும் புரிந்து கொள்ளவியலா? ஜடமாகவே இருந்துவிடுகிறேன் நான்…… காலம் என் கைகளில் திணித்துப்போன… நிறமற்ற கனவுகள்… எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்… தேவதைகள் யாருமற்ற எனது நிலத்தில் சருகுற்று… பேய்கள் வசிக்கட்டும்…. எப்போதேனும்… கொலுசுகளோடு வரும் யாரோ ஒருத்தி கண்டெடுக்கக் கூடும்… சருகுகளினடியில்…. சிக்குண்டு போன… யாரும்படிக்காத… எனது புத்தகத்தின்… இறுதிப் பக்கங்களை…..
இந்தக் கவிதையும் நன்றாக இருக்கிறது.
வலைப்பூ மாற்றங்களும் நன்றாக வந்திருக்கின்றன. வாழ்த்துக்கள் அகிலன் 🙂
பின்னூட்டங்களை மட்டுறுத்தலில் இட்டால், தமிழ்மணத்தில் “அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியில் உங்கள் வலைப்பூ தெரியும் என்று நினைக்கிறேன். “அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்” பகுதியில் உங்கள் வலைப்பூவும் பஹீமா ஜஹான் கவிதைகள் வலைப்பூவும் வருவதற்கான ஏற்பாட்டை அவசியம் செய்யுங்கள் அகிலன். மேலதிக உதவிக்கு ப்ரியன்(விக்கி)யை அணுகுங்கள்.