01. காலம் ஒரு கொடியகனவாயிற்று உன் பிரியங்கள் என்னை மீளெழுப்பின உனது வார்தைகள் எனது காயங்களை ஆற்றின உன் பார்வைகள் தொலைந்து கொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்தன.. என்ன சொல்ல எனது சாம்பர் மேட்டிலிருந்து புதியமுளைகளை உருவாக்கும் உனது புன்னகைகளை என்னோடே விட்டுவிடு நான் பிழைத்துப் போகிறேன்… 02. நான் தயங்குகிறேன் மிகவும் உன் பிரியத்தின் சுவர்கள் கண்ணாடிகளால் ஆனவையாயிருக்கையில் கற்களை வீசிவிடக் கூடாதென்கிற தயக்கம்…
அருமை தம்பி அகிலன்
விளக்கை மேயும்
பூச்சி…. விட்டில். ok.
வேட்டைக்குத்
தயாராகிறது பல்லி. m
பல்லியும் பூச்சியை சாப்பிடும். ஓகே. 2 ஆல் புச்சிக்கு மரணம்.
சரி அதென்னது பூனையின்
நிழற்கரங்கள்
தன்மீது படிவதை
அறியாது….
பல்லியை பூச்சியை பூனை சாப்பிடாதே. சாப்பிடுமா? ம்.. “தெரியேலை எனக்கு. “
ஆனால் மறைவில் இன்னொரு படிமம். நாமாக மனத்திடை படம் போடலாமோ.!
எலி ஒன்றை பூனை பிடிக்க முற்படுவதை நிழல் ஓவியமாய்.
ம்.. நன்றாக இருக்கு கவிதை.
அழகிய ஓவியம் மனத்திடை.
நன்றி விக்கி அண்ணா மற்றும் நளாயினி அக்கா இருவருக்கும்.
நளாயினி said…
பல்லியை பூச்சியை பூனை சாப்பிடாதே. சாப்பிடுமா? ம்.. “தெரியேலை எனக்கு. “
சாப்பிடும் என்றுதான் நினைக்கிறேன்
உங்களின் அத்தனை கவிதையும் அருமை. அழகிய கவிதை மொழி. இவற்றை ஒரு புத்தகமாக்குங்களன். காலம் போனால் கவிதையின் வீச்சம் குறைந்து போகும்.
மறுபடியும் நன்றி நளாயினி அக்கா