என்னை நிராகரியுங்கள்
எல்லாமுமாகிய
என் சர்வவல்லமை பொருந்திய
பிதாக்களே
என்னை நிராகரியுங்கள்
எப்போதும்
துயரத்தின் சாயல் படிந்த
ஊரின் தெருக்களை விட்டேகிய
கொடுங்குற்றத்திற்காக
என்னை நிராகரியுங்கள்
உங்களிற்காக
கொஞ்சப்புன்னகைகளையும்
எனக்காக
உயிர் குறித்த நம்பிக்கைகளையும்
உங்களிடம் அச்சத்தைஊட்டக்கூடிய
மரணங்கள் பற்றிய கதைகளையும்
மட்டுமே
வைத்துக்கொண்டிருக்கும்
ஏதிலியாகிய என்னை
மேட்டிமை தங்கிய பிரபுக்களே
நிராகரியுங்கள்.
உங்கள்
தொழுவத்துக்குள் நுழைந்துவிட்ட
ஒரு அருவருக்கத்தக்க
ஓநாயைப் போல என்னை எண்ணுகிறீர்கள்
எனக்குத் தெரிகிறது
வெறுப்பின் கடைசிச்சொட்டையும்
கக்கித் தொலைத்துவிடுகிற
உமது விழிகளிடம்
எனக்குச் சொல்வதற்கு எதுவுமில்லை
ஊரில் எனக்குச் சொந்தமாய்
ஒரு வயலிருந்தது
என்பதைக்கூட..
உள்ள குமுறல்கள்
வலிக்க கூடியதாக இருந்தாலும்
தொழுவத்தில் அடைக்கப்பட்ட
ஆடுகளை போல் இருப்பதால்
வலிகளை உணரமட்டுமே முடிகிறது
//வெறுப்பின் கடைசிச்சொட்டையும்
கக்கித் தொலைத்துவிடுகிற
உமது விழிகளிடம்//
இந்த வரி நல்லா இருக்கு.
ennal kankalaikkuda nakatra mudiyavillai
ungal website ennai ungal theeevira rasigan
akkivittathu…
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க அகிலன்..