Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

காணிமுழுவதும் கண்ணிவெடியல்லவா…?

த.அகிலன், October 16, 2007December 1, 2009
“வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்
அக்காணி முழுவதும் கலகலப்பல்லவோ”

இப்படிப்பெரியவர்கள் கவிதைகளை எடுத்துவிட்டுக்கொண்டு இருக்க வாயைப்பிளந்து கொண்டிருந்திருக்கிறேன்.கானாபிரபாவின் பாசையில் சொன்னால் சின்னனுகளாய் இருந்த அனுபவங்கள் இவை. நவராத்திரி என்கிற வார்த்தையை விட அதை அந்த பத்து நாட்களையுமே சரஸ்வதிபூசை என்று சொல்லித்தான் நான் திரிந்திருக்கிறேன். நவராத்திரி என்பது கொஞ்சம் பெரியவர்கள் சொல்லும் சொல்லு. எங்களுக்கென்ன அதைப்பற்றி கவலை மொத்தமாய் சரஸ்வதி பூசை. எங்களுக்கு சரஸ்வதியெல்லாம் அவ்வளவு முக்கியமாக படவில்லை புக்கை அவல் கடலை கௌப்பி போன்றவை சகலகலாவல்லி மாலை படிக்கப்படும்போதே கண்ணுக்குள்ளால் வாயுக்குள் போய்கொண்டிருக்கும். எப்படா முடியும் இந்த தேவாரம் என்னு தவமிருப்போம்.ம்.. அதெல்லாம் ஒரு காலம்.

அந்தக்காலத்தில நான் திடீரென்று பெரிய பேச்சாளரா மாறிப்போனேன்.

சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி சக்திக்கு நவராத்திரி

போன்ற பத்து வசனங்களைப்பாடமாக்கி வெற்றிகரமாக ஒப்பித்தல் அதுதான் என்னைப்பேச்சாளர் ஆக்கியது.

அப்பிடியே பத்து வசனங்களையும் தலைகரணமாகப்பாடமாக்கி தலையை இடமிருந்து வலமாகவும் பிறகு வலமிருந்து இடமாகவும் ஒரோ சீராக ஆட்டுவதற்கும் பழகி(எல்லா பார்வையாளர்களுடைய முகத்தையும் பார்க்க) அப்பாவின் சால்வையை வேட்டியாகச் சுற்றியபடி கடைசியாக விஜயதசமி அன்று மேடையில் ஏறினால்

பிறகென்ன, பெருமதிப்பிற்குரிய அதிபர் அவர்களே,ஆசிரியர்களே,என்சக மாணவ மாணவிகளே அனைவருக்கும் என் இந்நேர வந்தனங்கள் என்று தொடங்கவே குரல் தழுதழுக்கும் மெல்லாமாய் கண் இருட்டி மண்டைக்கள் பட்டாம் பூச்சி பறக்கும். ஒரு மாதிரி சமாளித்து முதலாவது வசனத்தை பேசி முடித்து

நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை தேவியையும் அடுத்த மூன்று நாட்களும்…. அடுத்த மூன்று நாட்களும் தலைகரணமாப் பாடமாயிருந்தது திடீரென்று மறந்து போகும்… அடுத்த மூன்று நாட்களும் அடுத்த மூன்று நாட்களும் என்று டைப்படிக்க .. ஒரு ஓரமாக மூலையில் இருக்கும் ஒரு வாத்தியார் எடுத்துக்கொடுப்பார் செல்வத்தை செல்வத்தை என்று ரகசியமாக சத்தம் வரும் மூலையில் இருந்து.. உடன பிக்கப்பாகி அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி சரஸ்வதியையும் வேண்டி விரதமிருப்பர் என்று ஒரு வழியாக செல்வத்துக்கு துர்க்கையையும் கல்விக்கு லக்சுமியையும் வீரத்துக்கு சரஸ்வதியையும் அதிபதிகளாக அறிவித்து விட்டு மேடையை விட்டு இறங்க வேர்த்து விறுவிறுத்துப்போகும்.

பிறகு பிறகு நடுக்கமில்லாமல் பத்து வசனத்தையும் அடுத்த வருசம் சொல்லிப்பழகி பள்ளிக் கூடத்தில் புகழ் பெற்ற பேச்சாளராகவிட்டேன்.

ஒரு வழியாக எல்லாரும் தங்கள் கூத்துக்களை நிகழ்த்தி முடிக்க வாணிவிழா முடிவுக்கு வரும். அன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ஆசைஆசையாப் பொங்கும் வீட்டை போக மனமில்லாமல் அப்பிடியே ஒவ்வொரு வகுப்பறையாக ஏறி இறங்கி பார்த்துக்கொண்டே வருவோம் கொஞ்சம் பெரியவகுப்பு மாணவர்களின் (கானாபிரபாவின்) வகுப்பறைகளில் வாணிவிழாவை ஒட்டிய ஒரு மார்க்கமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கும்.

உதாரணத்துக்கு வகுப்பில் வாணி எண்டொரு பிள்ளையிருந்தால்..

“அடி வாணி உன்வீடும் வளவும்
நானறிவேன்
உன் காணியை கொப்பரை எனக்கெழுதச்சொல்லு..”

வேணியெண்டிருந்தால்…

“வாணி விழாவிற்கு வீணி
வடிய வடிய வந்திருந்த
வேணியர்க்கும் வந்தனங்கள்”

கசிந்தா எண்டொருத்தி இருந்தாள்
அவளுக்கு எழுதியிருந்தது…

“கைகசியக் கசிய கற்கண்டு
கொண்டு வந்த கசிந்தாவுக்கு வந்தனங்கள்”

பிறகு இப்பிடியெல்லாம் சந்தோசமா கொண்டாடின வாணிவிழாக்கள் முடிஞ்சு போய் பள்ளிக்கூடக்கட்டிடம் உடைஞ்சுபோய் அல்லது அதைவிட்டிட்டு இடம்பெயர்ந்து போய் வாணிவழாக்கள் கொண்டாடப்பட முடியாமல் போயின அல்லது அடக்கமாக கொண்டாடப்பட்டன….

பிறகு எங்கள் வாணிவிழாக்களில் கவிதைகள் இப்படியிருந்தன
“வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்
அக்காணி முழுவதும் கண்ணிவெடியல்லவா”

கானாபிரபாவின் பதிவைப்பார்த்தவுடன் எனக்கும் ஏதோ நவராத்திரி ஞாபகங்கள் தலைகாட்டத்தொடங்கிவிட்டது அதற்காக முதலில் அவருக்கு நன்றி

த.அகிலன்

சரஸ்வதி பூசை மீள்பதிவு….
எண்ணங்கள்

Post navigation

Previous post
Next post

Related Posts

வைரமுத்துவின் மறுபக்கம் ஒரு திடுக்…..!?

July 27, 2007December 1, 2009

என்னதான் புகழ் மிக்கவராக இருந்தாலும்.பாடலாசிரியர் வைரமுத்துவின் இலக்கிய முகம் என்பது சர்ச்சைகள் நிறைந்ததாகவே யிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் பின்னால் நிகழ்ந்து விட்டிருக்கின்ற அரசியல் பற்றி நிறைய விவாதங்களும் கேள்விகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் கீற்று இணைய இதழுக்கு பேட்டி அளித்திருக்கிற திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி வைரமுத்துவின் இன்னொரு முகத்தை சத்தமில்லாமல் நாகரிகமாக தோலுரித்திருக்கிறார் இங்கே அந்த கேள்வியம் சுவாரஸ்யமான பதிலும் இங்கே. இப்ப இருக்கிற இளம் பாடலாசிரியர்களுக்கு…

Read More

ஆஸ்பத்திரி ராணிகள்…..

May 13, 2008December 1, 2009

அந்த வேதனையிலும் எனக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. பின்ன நாலு நளா கோல்ட் ஆக்ட்,சமஹன்,பனடோல்,ஆக்சன் 500 எண்டு முயற்சி செய்து செய்து தோத்துப்போய் ஆஸ்பத்திரிக்குப்போனா. போன உடனேயே ஒரு நர்சம்மா வாயில தெர்மா மீட்டரை செருகி உடைஞ்சா 100 ரூபாய் எண்டு சொன்னா சிரிப்பு வருமா வராதா? ஒரு வேளை நோயால் துவண்டு போயிருக்கும் நோயாளிகளை கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் அவா இந்த விசயத்தை சொல்லியிருப்பாவோ? என்னவோ? ஆழ்வார்ப் பேட்டை…

Read More
எண்ணங்கள்

கொல்லப்பட முடியாத எஸ்.போஸின் வரலாறு

April 17, 2018June 9, 2021

துப்பாக்கியின் கண்கள் வாசிக்கத் தொடங்கிய பிறகு சொற்கள் ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன பீரங்கியின் வாய்களால் அச்சமூட்டப்பட்ட சொற்கள் கொண்டு செய்யப்படுகிறது ஒரு நாள்…. முடமான சொற்கள் கொண்டு கவிதைகள் செய்வது எங்ஙனம்? கால்களற்ற சொற்களைக் காணச் சகியாதொருவன் துப்பாக்கிகளறியாதொருகணத்தில் மொழியைப் புணர்ந்து புதிதாய் கால்முளைத்த சொற்களைப் பிரசவிக்கலானான்… பின் ஓர் இரவில்… துப்பாக்கியின் கண்கள் அவன் முதுகினில் நிழலெனப் படிந்து அவன் குரலுருவிப் பின் ஒரு பறவையைப்போல விரைந்து மறைந்ததாய்…..

Read More

Comments (9)

  1. கானா பிரபா says:
    October 1, 2006 at 5:16 pm

    வணக்கம் அகிலன்

    அந்த இனிய காலங்களைத் தொலைத்துக் கனவுகளோடு வாழபவர்கள் நாங்கள், ஒவ்வொருவர் பின்னாலும் இப்படி எத்தனையோ நினைவுத் தடங்கள். இதுபோல் இன்னும் உங்கள் நினைவுகள் பதிவுகளாக வரவேண்டும்.

  2. வசந்தன்(Vasanthan) says:
    October 1, 2006 at 6:11 pm

    பெரிய பெரிய விளையாட்டெல்லாம் காட்டியிருக்கிறயள்.
    நாங்கள்தான் நசுக்கிடாமல் இருந்திட்டம் போல கிடக்கு.

  3. கானா பிரபா says:
    October 2, 2006 at 7:19 am

    ஆரைசொல்லுறியள் வசந்தன்:-)))

  4. த.அகிலன் says:
    October 2, 2006 at 7:20 am

    நன்றி கானா பிரபா மற்றும் வசந்தன் இருவருக்கும்.கானாபிரபா என்ன உங்கள் இனிய காலங்களைத் தொலைத்தாலும் நினைவுகளோடு வாழ்தல் சுகம் தானே ம்… வசந்தன் சார் நான் ஒன்றும் பெரிய வியைளாட்டில்ல இது சும்மா சின்னது…

    அன்புடன்
    த.அகிலன்

  5. Kanags says:
    October 2, 2006 at 8:36 am

    கானா பிரபா வலைபதிய லேட்டாக வந்தாலும் பலர் வலைபதிய அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி. உங்கள் வலைப்பதிவுக்குள் இன்றுதான் நுழைந்தேன். வலைப்பதிவின் தலைப்புத் தான் என்னை உங்கள் பதிவுக்குள் நுழைக்கக் காரணமாக இருந்திருக்கலாம். உங்கள் பழைய பதிவுகளை வாசித்தேன். அனைத்தும் முத்தான கவிதைகள். வாழ்த்துக்கள்!

  6. த.அகிலன் says:
    October 2, 2006 at 2:15 pm

    நன்றி கங்ஸ் உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நீங்கள் சொன்னது போல கானா பிரபாவின் வலையும் நான் வலைப்பதிவனாக ஒரு காரணமாக இருந்திருக்கிறது தொடர்ந்து வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்
    அன்புடன்
    த.அகிலன்

  7. வசந்தன்(Vasanthan) says:
    October 2, 2006 at 4:07 pm

    //வசந்தன் சார் //
    கிழிஞ்சுது போ கிளிநொச்சி.

  8. த.அகிலன் says:
    October 3, 2006 at 9:36 am

    //கிழிஞ்சுது போ கிளிநொச்சி//
    ம்.. ஏற்கனவே கிபிர்க்காரன் கிளிக்கிறான் கிளிக்கப்போறான் இதில நீங்க வேற கிழிக்கிறீங்க…

    //இருபதுகளின் தொடக்கமாகவும் இருக்கிறாராம்//

    பொறாமைத்தீபற்றி எரிந்தால் என்ன செய்வது வசந்தண்ணை உண்மையைத்தான் நான் சொல்லுறன்.

    அன்புடன்.
    த.அகிலன்

  9. அக்கா says:
    October 3, 2006 at 6:34 pm

    //இருபதுகளின் தொடக்கமாகவும் இருக்கிறாராம்//

    (பொறாமைத்தீபற்றி எரிந்தால் என்ன செய்வது வசந்தண்ணை உண்மையைத்தான் நான் சொல்லுறன்)
    ******************************
    வசந்தன்,
    இருபதுகளின் தொடக்கம் “அது” எப்பவோ தொடங்கியாச்சு….
    அகிலனின் எல்லாக் கவிதைகளையும் பாருங்கள்
    பாடாய்ப் படுத்திய கதைகளை எல்லாம்
    எழுதியிருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes