என்னதான் புகழ் மிக்கவராக இருந்தாலும்.பாடலாசிரியர் வைரமுத்துவின் இலக்கிய முகம் என்பது சர்ச்சைகள் நிறைந்ததாகவே யிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் பின்னால் நிகழ்ந்து விட்டிருக்கின்ற அரசியல் பற்றி நிறைய விவாதங்களும் கேள்விகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.
அண்மையில் கீற்று இணைய இதழுக்கு பேட்டி அளித்திருக்கிற திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி வைரமுத்துவின் இன்னொரு முகத்தை சத்தமில்லாமல் நாகரிகமாக தோலுரித்திருக்கிறார் இங்கே அந்த கேள்வியம் சுவாரஸ்யமான பதிலும் இங்கே.
இப்ப இருக்கிற இளம் பாடலாசிரியர்களுக்கு இடையேயான உறவு எப்படி இருக்கு? மூத்த கவிஞரான வைரமுத்துவுக்கும், உங்களை மாதிரி இளைஞர்களுக்கும் தொடர்ந்து மோதல் வந்துக்கிட்டே இருக்கே?
சினிமா ஒரு பெரிய துறை. அதில் ஒவ்வொருத்தரும் தனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டும் பண்ணிட்டும் போறாங்க. அவ்வளவு தான். இதில அவங்களோட உறவு எப்படி இருந்தால் என்ன? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க. அது அவங்களோட மன இயல்பை பொறுத்தது அவ்வளவுதான்.
வைரமுத்துவை நான் ஒரே ஒரு தடவைதான் நேரில் சந்திச்சேன். கணையாழியில் வேலை பார்த்தபோது நடந்தது அது. அப்ப என்னோட கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருந்தது. ஒரு பத்திரிகைக்காக இரண்டு பேரும் சந்திச்சோம். இலக்கியம் தொடர்பா கடுமையான விவாதங்கள் நடந்தது. அவர் சொல்ற எல்லாத்தையும் நான் கடுமையா மறுத்தேன். விவாதத்தை முடிஞ்சு, பத்திரிகைக்காரங்க போன பின்னாடி, வைரமுத்து எங்கிட்ட சொன்னார். ‘நிறையப் படிக்கறீங்கன்னு தெரியுது, உங்களோட எழுத்தும் நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க’ அப்படின்னு சொன்னார். நல்ல விஷயம் தான். அந்தச் சின்னப் பாராட்டைக்கூட மத்தவங்க முன்னாடி சொல்லாம தனியாச் சொன்னார். அதுதான் வைரமுத்து.
அன்பருக்கு நன்றி
shocking..
யுகபாரதியின் கீற்று பேட்டியினை மிக்க ஆச்சர்யங்களுடன் படித்துக் கொண்டே வரும் பொழுது, “மன்மத ராசா” பாடல்ளைப் போன்று கொடுப்பதின் மூலமாக சமூக வக்கிரவங்களுக்கு துணை போவது போல இல்லையா என்பதனைப் போன்ற கேள்விக்கு அவர் கொடுத்த மற்றுமொரு வியாபாரித்தனமான நொண்டிச் சாக்குகளை படிக்க ஆரம்பித்தவுடன், மூடிவைத்து விட்டு வந்து விட்டேன்.
இவ்வளவு பொறுப்பான முறையில் நன்கே பேட்டியளித்த அன்பர் எங்கு யாருக்காக சோடை போனார். இங்கே அவர் நினைவில் நிறுத்த வேண்டியது கவிக்கோ அப்துல் ரஹ்மானையும், மு. மேத்தா போன்றவர்களையும்…
‘வைரமுத்துவின் மறுபக்கம்- ஒரு திடுக்’ என்று குமுதம் பாணியில்
தலைப்பைப் பார்த்ததும், நீங்கள்
அந்த “……..இதிகாசம்” பற்றித்
தான் குறிப்பிட்டிருக்கிறீர்களோ என்று
திகைத்தேன்.
நல்லவேளை, நான் நினைத்தது
இல்லை.
இவரேன்றல்ல!பல பிரபலங்கள் இப்படியே!!
/*வைரமுத்துவின் மறுபக்கம் ஒரு திடுக்…..!? */
ஒரு தொழில் முறை போட்டி என்பது வேறு…இந்த சின்ன விடயத்தை கூட பேட்டியில் சொல்லும் அளவிற்கு புதுக்கவிஞர் தாழ்ந்திருக்க வேன்டாம்…
வைரமுத்து தனியாக அழைத்துப் பாராட்டி இருக்கிறார் என்று யுகபாரதி…மகிழலாம். வைரமுத்து சொல்லாமலே சென்று இருந்தால் யுகபாரதி இந்த நிகழ்வை மனதில் வைத்திருப்பாரா என்பது சந்தேகமே !
அவரை குறைசொல்லும் யுகபாரதி இதுபோல் நடந்து கொள்கிறாரா ? என்பது யுகபாரதிக்கு மட்டும் தான் தெரியும்.
//கோவி.கண்ணன் said…
வைரமுத்து தனியாக அழைத்துப் பாராட்டி இருக்கிறார் என்று யுகபாரதி…மகிழலாம்.//
ஓருவேளை பத்திரிகையாளர் முன்பு பாராட்டியிருந்தாள் இன்னும் கொஞ்சம் மகிழ்ந்திருப்பாரோ என்னமோ எதற்கும் நீங்கள் பேட்டியை முழுமையாக ஒருக்கா படித்துவிடுங்கள் கோவி கண்ணன்
vairamuthuvai pesa enthavoru thaguthium ivaruku illai.