யாரும் புரிந்து கொள்ளவியலா?
ஜடமாகவே இருந்துவிடுகிறேன்
நான்……
காலம்
என் கைகளில்
திணித்துப்போன…
நிறமற்ற கனவுகள்…
எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…
தேவதைகள்
யாருமற்ற எனது நிலத்தில்
சருகுற்று…
பேய்கள் வசிக்கட்டும்….
எப்போதேனும்…
கொலுசுகளோடு
வரும்
யாரோ ஒருத்தி
கண்டெடுக்கக் கூடும்…
சருகுகளினடியில்….
சிக்குண்டு போன…
யாரும்படிக்காத…
எனது புத்தகத்தின்…
இறுதிப் பக்கங்களை…..
மிக அருமையான கவிதை..
Its so wonderful and so tochable, i don’t know how you could write something about your feeling mach with others good job
its toch me lot good job
//காலம்
என் கைகளில்
திணித்துப்போன…
நிறமற்ற கனவுகள்…
எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…//
🙁
கவிதை என்றால் அது
சோகமாகத்தான் இருக்க வேண்டுமா ?
“நடந்ததெல்லாம் நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை ”
ஆக வேண்டியன குறித்து எழுச்சிக்
கவிதைகள் எழுதலாமே
(மன்னிக்கவும் : மனதைக் காயப் படுத்தியிருந்தால்)
காதலிலையும் எழுச்சிக்கவிதைகள் இருக்கோ.. அதெப்பிடி ஒரு சாம்பிள் ப்ளீஸ்
//காதலிலையும் எழுச்சிக்கவிதைகள் இருக்கோ.. அதெப்பிடி ஒரு சாம்பிள் ப்ளீஸ்//
pOnal pOkattum pOda ! indha boomiyil Nilaiyay vaazhndhavar yaarada