ஒருபுன்னகைகடந்துபோகிறது நிமிர்ந்து நடக்கும்நதியைப்போல….. சட்டென்றுபின்தொடர்ந்து முழிக்கிறது மனசுவாகனங்களின்தெருவில் மாட்டிக்கொண்டஒரு குழந்தையைப்போல, யாரும் கண்டுகொள்ளாத குழந்தையின் கண்ணீர்எனக்குள் நுழையும் ஒரு நதியின் கவிதையென வாகனங்களின்இரைச்சலையும்; மீறிஎன்காதுகளை அடைகிறது.புல்லாங்குழலின்சங்கீதம் த.அகிலன்
என்னுடைய காலடிச்சுவடுகள்கண்காணிக்கப் படுபவைபுன்னகைகள் விசாரணைக்கானவைஉயிர் குலையும்ஓர் ஊரின்பெரும்பயணி நான் அடுத்த கணங்கள்பற்றிய அச்சங்களும் துயரங்களும்நிரம்பிக் கிடக்கிறதுவழிமுழுதும் துயரெழுதும் கவிதைவழிமுழுதும்வருகிறது துணைக்குதொலைவிலெழும் வேட்டோசைக்குச்செத்துப்போகிறான்என்சகபயணி துப்பாக்கிகளிற்குக்கால்கள் முளைத்த இரவில்அவை வெறிகொண்டெழுந்தன ஒரு கலையாடியின் கோபம்போலஇரவு முழுதும் பெய்த மழையில்கரைந்து போயிருந்ததுபலியாடுகளின் இரத்தம் அடுத்த கணங்கள்பற்றிய அச்சங்களும்துயரங்களும்நிரம்பிக்கிடக்கிறதுவழிமுழுதும் த.அகிலன்