ஒரு
பேனாவைப்போல்
எப்போதும்
கொட்டிவிடத்தயாராய்
என்னுள்
நிரம்பிவிட்டிருக்கும்
ஞாபகங்கள்……
சின்னதாய்
ஓர்
எறும்பின் ஊரல்
கொஞ்சம்
நளினமாய் மோதும்
மெல்லியகாற்று
ஏன்?
ஒரு
தேனீர்க்குவளையின்
ஒரம் கூடப்போதுமானதாயிருக்கும்
ஞாபகங்களைக்
கிளறி விடுவதற்கு..
இன்னமும்
என்னுள்
புருவம் சுருக்கி
பார்த்துக்கொண்டேயிருக்கிறாய்
நீ.
மறுபடியும்
மீன்தொட்டி
உடைந்து நொருங்குகிறது
மனசுள்;
நான்
மூடிவைத்துவிடுகிறேன்
பேனாவை
மீண்டும்
ஏகாந்தத்தில் இருந்து
இறங்கும்
மனசு
இயல்பிற்கு….
அன்பினிய திரு அகிலன்,
உங்களின் கவிதைகள் அருமை. அவைகளும் எனக்கு ஆசிரியர்கள்.
பாசமுடன்
என்.சுரேஷ், சென்னை
nsureshchennai@gmail.com