தேவதை தேவையில்லை
தெளிந்த நல் வதனம் போதும்
வைர நகையெதற்கு?
வழித்துணையாதல் இன்பம்
படிக்கிற பழக்கமுண்டு
அடிக்கடி திட்ட மாட்டேன்
பாதியாய் இருக்க வேண்டாம்
முழுவதும் நீயே ஆகு
இம்சைகள் இருக்கும் கொஞ்சம்
இனிமைதான் ஏற்றுக்கொள்க
வருமானம் பரவாயில்லை
வாழ்வதற்கு கைவசம் கவிதைகள்
வாய்க்கப் பெற்றேன்
காதலில் விழுந்தேனில்லை
எனவே பிறக்கின்ற பிள்ளைக்கான
பெயரையும் நீயே இடலாம்
சந்தேகம் துளியும் இல்லை
அந்தரங்கம் உனக்கும் உண்டு
சமயத்தில் நிலவு என்பேன்
சமையலில் உதவி செய்வேன்
எழுதிடும் பாட்டுக்குள்ளே
எங்கேனும் உன்னை வைப்பேன்
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.
இப்படித் தன்னுடைய வருங்கால மனைவிக்காக கவிதை எழுதியிருந்தார் யுகபாரதி. கடைசியில் அவரது தேடல் முடிந்து கல்யாணமுமாடியிச்சு.. காதல் பிசாசு என்றெல்லாம் பாட்டெழுதியிருக்கிறீர்கள். காதலில் சிக்கியதேயில்லை என்று பொய்தானே சொல்கிறீர்கள்.. நான் யுகபாரதியோடு நெருக்கமான ஆரம்பநாட்களில் இரண்டு மூன்று முறை இந்தக்கேள்வியை கேட்டிருப்பேன். அவர் மறுத்துக்கொண்டேயிருந்திருக்கிறார்.. இனிமேல் மறுக்கவே முடியாது அதான் இன்னிக்கு கல்யாணமாயிடிச்சில்ல.. (சிக்கிட்டாருல்ல இனிமே காதலிச்சே ஆகணும்)
(யுகபாரதி -அன்புச்செல்வி)
திரைப்பட பாடலாசிரியர்,கவிஞர் யுகபாரதிக்கும் அன்புச்செல்விக்கும் 23.11.2008 தஞ்சையில் கல்யாணம் நடந்தது. அவரை ஒரு வானொலிக்காக பேட்டி எடுக்கப்போன என்னை தன் தம்பியாக அரவணைத்து அன்பு செய்யும்(அவரைப்பற்றி எழுத நிறைய உண்டு. வாழ்த்தும்போது எதுக்கு வழவழாவென்று அதான் சுருக்கமாய்.) அந்த இனிய அண்ணனுக்கும் அவரோடு இல்வாழ்வைத்தொடங்கும் அன்புச்செல்விக்கும் இந்த இனிய நாளில் யுகபாரதி அன்புச்செல்வி தம்பதி எல்லாவளங்களும் பெற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்..
நிறையப்பிரியமுடன்
த.அகிலன்
மன்மதராசா பாட்டு இவுரு எழுதினதுதானே அதான் தலைப்பு இப்படி..ஹி ஹி ஹி
நிறைவான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்…:)
வாழ்த்துக்கள் யுக பாரதி
ஒரே ஒரு கோரிக்கைதான்
உன்னிடம் வைப்பதற்கு
வேலைக்குக் கிளம்பும்போது
அழுவதைத் தவிர்க்க வேண்டும்
வெறுங்கையோடு திரும்பி வந்தால்
வெகுளியாய்ச் சிரிக்க வேண்டும்.
இது உங்கள் மனைவிக்கும் நீங்கள் கூறுவது போல் அமைகிறது அல்லவா. ம்….ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். மிகவும் அருமை அண்ணாடும்.
எளிமையான, அருமையான கவிதை 🙂
வாழ்த்துக்கள் கவிஞர் யுகபாரதிக்கு
அழகான கவிதையை எழுதி இருக்கிறார்..
தம்பதிகளுக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. 🙂
அகிலன்.. உங்களுக்கு எப்போ கல்யாணம்??
😉
இது உங்கள் மனைவிக்கும் நீங்கள் கூறுவது போல் அமைகிறது அல்லவா. //
என்னாது
அகிலனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?
சொல்லவேயில்லையே..
//என்னாது
அகிலனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..?//
யோவ் சயந்தன்.. மெல்போர்ன் கமல் ஏதோ ஒரு ஆர்வத்தில அவற்ற மனைவியை நினைச்சு எழுதியிருக்கிறார் அதுக்காக நீரும் சேர்ந்து புரளியைக் கிளப்புறீர் (அவனவன் கல்யாணமானவங்களே ஆகல எண்டு அடிச்சு சத்தியம்பண்ணுறான்..) ஒரு கன்னிப்பையன்ர வாழ்க்கையை கழுவுல ஏத்தப்பார்க்கிறீரே…
கவிதை நல்லாதான் இருக்கு ஆனால் நடைமுறையோடு தான் கொஞ்சம் முரண்டுபிடிக்குது..யுகபாரதிக்கு கல்யாணம் ஆகியிருக்கு சந்தோஷம் ஆனால்..இப்படி லட்சியத்துக்கு துணை கேட்காமல் நாட்டு நிலைமை இவ்வளவு ஆனதுக்கு அப்புறமும் லட்சம் கேட்கிற மன்மதராசா(கற்பனையில்) களுக்கு என்ன செய்யலாம் அகிலன்?
உங்களை மாதிரி கன்னிப்பையன்கள் தான் இதற்கு ஒரு முடிவு கட்டணும்.