• நிலவின்
ரகசிய முகமும்
ராட்சச முகமும்
கடந்து
ஒளியின் ஓராயிரம்
மின்னல்களின் மடியில்
தவழ்ந்து கெண்டிருக்கிறது
எனது தேவதையின்
முதல் புன்னகையின் தரிசனம்.
• மீண்டும் முளைக்காத
முளைக்கவும் முடியாத
வண்ணத்துப் பூச்சிகள்
மின்னலென மறைந்த கணத்தின்
நினைவுகள்
எனைக் கிளர்த்திக் கிளர்த்தி
போதையூட்டுகின்றன.
• நான்
நுழைந்து கொண்ட பின்பு
தாமாகப் பூட்டிக்கொண்டு
எங்கோ ஒளிந்துகொண்டு விட்டன
சொற்களாளான இவ்வறையின் கதவுகள்.
• ஒரு
பனித்துளியிடம்
புகுந்துகொண்ட
என் உலகம்
தன்
சூரியனைத் தொலைத்துவிட்டுச்
சுற்றிக்கொண்டிருக்கிறது
வெறும் இருள் குகையாய்.
மீண்டும் முளைக்காத
முளைக்கவும் முடியாத
வண்ணத்துப் பூச்சிகள்
மின்னலென மறைந்த கணத்தின்
நினைவுகள்
எனைக் கிளர்த்திக் கிளர்த்தி
போதையூட்டுகின்றன.
//
அருமை அகிலன் 🙂
அழகான கவிதைகள்..
அழகான கவிதைகள்..
//ஒரு
பனித்துளியிடம்
புகுந்துகொண்ட
என் உலகம்
தன்
சூரியனைத் தொலைத்துவிட்டுச்
சுற்றிக்கொண்டிருக்கிறது
வெறும் இருள் குகையாய்//
very nice agilan
Ganesh
வணக்கம் த.அகிலன்
அழகான கவிதை. இன்னும் எழுது. உன் கவிதை உன்னிடம் மீளத்தரப்பட்டிருக்கிறது. உன் புதிய முயற்சிகளில் என்றும் அபிமானமுள்ள
ப.அருள்நேசன்
பல நாட்களுக்கு பிறகு கவிதைகளோடு
நல்லாயிருக்கு அண்ணன்…
காதல் மற்றும் அதன் வலிகளை இடக்கிட சொல்லுங்கோ அண்ணன்…
பகிர்ந்து கொள்கையில் வலிகளின் தீவிரம் குறைகிறது அல்லது இல்லாமல் போகிறது…
பகிர்கின்ற மனங்களின் உறவு பலப்படுத்தப்படுகிறது…