துப்பாக்கியின் கண்கள்
வாசிக்கத் தொடங்கிய பிறகு
சொற்கள்
ஒளிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன
பீரங்கியின் வாய்களால்
அச்சமூட்டப்பட்ட
சொற்கள் கொண்டு
செய்யப்படுகிறது
ஒரு நாள்….
முடமான சொற்கள் கொண்டு
கவிதைகள்
செய்வது எங்ஙனம்?
கால்களற்ற சொற்களைக்
காணச் சகியாதொருவன்
துப்பாக்கிகளறியாதொருகணத்தில்
மொழியைப் புணர்ந்து
புதிதாய்
கால்முளைத்த சொற்களைப்
பிரசவிக்கலானான்…
பின்
ஓர் இரவில்…
துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில்
நிழலெனப் படிந்து
அவன் குரலுருவிப்
பின்
ஒரு பறவையைப்போல
விரைந்து மறைந்ததாய்..
அவன் குழந்தைகள் சொல்லின.
ஒரு பயங்கரத்தின் கவித்துவம்..
(பீரங்கியின் வாய்களால்
அச்சமூட்டப்பட்ட
சொற்கள் கொண்டு
செய்யப்படுகிறது
ஒரு நாள்….
முடமான சொற்கள் கொண்டு
கவிதைகள்
செய்வது எங்ஙனம்?
கால்களற்ற சொற்களைக்
காணச் சகியாதொருவன்
துப்பாக்கிகளறியாதொருகணத்தில்
மொழியைப் புணர்ந்து
புதிதாய்
கால்முளைத்த சொற்களைப்
பிரசவிக்கலானான்…
பின்
ஓர் இரவில்…
துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில்
நிழலெனப் படிந்து
அவன் குரலுருவிப்
பின்
ஒரு பறவையைப்போல
விரைந்து மறைந்ததாய்..
அவன் குழந்தைகள் சொல்லின.)
அகிலன் நான் என்னத்தை சொல்ல. ஏன் என்றால் உங்களின் கவிதைகளை நான் படிக்க தொடங்கி விட்டேன் என்றால் பார்ங்களேன். எனக்கு பிடித்த 5 கவிஞர்களில் நீங்களும் ஒருவர். தொடர்க உங்களின் பணி.
//ஒழிக்கத் தொடங்கிவிட்டன//
ஒளிக்க???
தாசத்தாருக்குப் பிச்ச மிச்ச நாலுபேரையும் அறிய ஆவல்.
சோபாசக்தி முன்பொருக்கா மூண்டு பெண்கள்தான் ஒழுங்காக் கவிதை எழுதினம் எண்ட கருத்தில ஏதோ சொல்லப்போய் மாட்டுப்பட்டது ஞாபகம் வருது.
அன்பின் தம்பி அகிலன் புதிய இல்லம் கண்டேன்.
வாழ்த்துக்கள்!
வழமையான
ஈழத்துயர் சிதறல்கள்!
இளமைத துள்ளலுன்
எழுத்துக்களில்!
வாழ்த்துக்கள், அகிலன்!
அன்புடன்,
ஆல்பர்ட்.
சொல்லிக்கொள்ளாமலே இடம்பெயர்கின்ற இந்தக்காலத்தில் இடம்பெயர்ந்த பின்னராவது சொல்லத் தோன்றியதே. நன்றி. புதுவீடு குடிபோவதென்றால் முன்பு அழைப்பிதழில் கொண்டாட்டம் எத்தனை தினங்களென்று குறிப்பிடுவது வழக்கம். அனேகமாக 3 நாட்கள்தான். உங்கள் கொண்டாட்டம் பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள். புத்தகங்கள் கிடைக்கும்வரை காத்துக்கொண்டிருக்கிறேன்.
ஹாய் அகிலன்!
உங்கள் கவிதை பிரமாதம்.
உங்கள் கவித்துவத்தின் புலமையை நீங்கள் பிஞ்சாயிருக்கும் போதே அறிந்தவன்.
வாழ்த்துக்கள்
நன்றி ஈழத்தமிழன்
//நீங்கள் பிஞ்சாயிருக்கும் போதே அறிந்தவன்.//
இது எப்படி என்று நான் அறியலாமா. தனிமடல் கூடப் போடுங்கள்.
நல்ல எழுதியிருக்கீங்க அகிலன்..
புதுமையான கற்பனைகள்..
நான் வலை தளங்களுக்கு புதியவன்..
எதாச்சையாக இப்பக்கம் வந்தேன்!
இதை போல் இன்னும் எழுத வாழ்த்துக்கள்!
hi it is well you done