Skip to content
த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

த.அகிலன்

கனவும், வாழ்வும் பின் என் சொற்களும்…

பாலாபாரதி திருடினாரா!!! ஆதாரங்கள் சிக்கின அதிர்ச்சி ரிப்போட்…(ஒலிப்பதிவு உள்ளே.)

த.அகிலன், August 14, 2007December 1, 2009

பா.க.ச நிறுவுனரும்.சங்கத்து தொண்டரடிப்பொடிகளால் தல என்றும் பாபா என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவருமாகிய பாலபாரதி அவர்கள் திடீரென்று ஒரு நூதனத்திருட்டு ஒன்றில் ஈடுபட்டு சங்கத்தினருக்கு பெரும் சங்கடத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

தல மற்றும் பாபா என்கிற அவரது வேறு பெயர்களினால் கோபமடைந்த உண்மையான தல மற்றும் சாய்பாபாவின் ரசிகர்கள் அவருக்கு ஆட்டோ அனுப்பி கடந்த சில மாதங்களிற்கு முன்னர் மொட்டையடித்து அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(அதைத்தான் சங்கத்து சிகாமணிகளாகிய நாங்கள் அனைவரும் தல திருப்பதியில் வேண்டுதல் நிறைவேற்றியதாக திசைதிருப்பி விட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது).

இன்று பாபா தனது தொண்டர்கள் வசூல்செய்த பணத்தில் வாங்கிய சொந்தவீட்டுப்பதிவில்.ஒரு கானக்குரல் பதிவொன்றினை இட்டிருந்தமையை அடுத்து அவருக்கு சங்கீத சிரோன்மணி என்கிற பட்த்தை வழங்கவேண்டும் என்கிறகோரிக்கை சங்கத்து உறுப்பினர்கள் சங்கீத அக்காடமிக்கு பிரேரித்தனர்.அதனை ஆலோசித்த அக்காடமி தலைவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

அதனை அடுத்து அவர்கள் வெளியிட்ட விபரங்கள் சங்கத்தினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.இன்று காலை பாபா பாடியதாக சொல்லி வெளியிட்ட குரல் பாபாவுடையது அல்ல என்றும்.அது சென்னை மின்சார ரயிலில் பிச்சைஎடுக்கின்ற கோடீஸ்வரன் என்கிறவருடைய குரல் என்றும் அதையே நூதனமான முறையில் திருடி தனது குராக பாலா பதிந்துள்ளார் எனவும் அக்காடமி தலைவர்கள் தெரிவத்தனர்.அதற்கு ஆதாரமாக அவர்கள் வெளியிட்ட மின்சாரரெயில் கோடீஸ்வரனின் குரலில் அமைந்த பாடல் இதோ.

இதை அடுத்து அவசரஅவசரமாக சங்கத்தை கூட்டிய முன்னாள் பின்னாள் எந்நாள் தலைவர்கள்(வீதபீப்பிள் லக்கி பொன்ஸ்) உள்ளிட்டோர். மயிலாப்பூர் சங்கீதாவில் மெதுவடைய மென்று முழுங்கிய படி அடுத்த கட்ட நடிவடிக்கை எடுப்பதற்காக அவசரக்கூட்டத்தை நிகழ்த்துகின்றனர். அவ்வப்போது லக்கி வரவனையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையின் தீவிரத்தை விளக்கிவருகிறார். இந்த திருட்டுக்காக பாலா கைது செய்யப்படுவாரா?

பின் குறிப்பு – மின்சார ரயில் இரப்போர் மன்னிக்கவும்( இது அவார்களை அவமானப்படுத்தும் நோக்கத்திலானது அல்ல)

ஒலிப்பதிவுகள்

Post navigation

Previous post
Next post

Related Posts

ஏண்டா நீயாடா ஓனரு? (ஒலிப்பதிவு)

August 31, 2007December 1, 2009

இது ஏற்கனவே வரிவடிவில் இடப்பட்டிருந்தாலும் இங்கே. இருந்தாலும் நம்ம கரும்புக்குரலில்(பில்டப்பு)கேட்பது மாதிரி வருமா? ஆனால் நிறைய கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது இப்போது நிறைய விசயங்களில் உடன்படுவது மாதிரியான மனநிலை உரையாடலில் போது இருந்தாலும் இப்போது மாறிவிட்டிருக்கிறது. அந்த மாற்றங்களிற்கு லிவிங்ஸ்மைலின் இந்தபதிவும் அந்த திரைப்படத்தின் பின்னால் அந்த திரைப்படத்தின் தாக்கம் அரவாணிகளின் சுயவாழ்வில் ஏற்படுத்திய இடர்களும் கூட மாற்றத்திற்கு ஒரு காரணம். மற்றபடி தலைப்புக்கு காரணம்(ஹி ஹி ஹி)

Read More

Comments (12)

  1. த.அகிலன் says:
    August 14, 2007 at 3:29 pm

    சங்கத்து சிங்கங்களே கொதித்தெழுங்கள்

  2. பாபா.மு.க says:
    August 14, 2007 at 3:34 pm

    இது அபாண்டம் வன்மையாக கண்டிக்கிறோம்.

  3. kodesvaran says:
    August 14, 2007 at 5:39 pm

    oh god! this is my voice.

  4. உங்கள் தமிழன் says:
    August 15, 2007 at 4:14 am

    யோவ், அடங்க மாட்டிங்களா? எனக்கென்னமோ இது உண்மைத்தமிழன் குரல் மாதிரி இருக்குது.

  5. தூயா [Thooya] says:
    August 15, 2007 at 12:10 pm

    பாலாண்ணா பாவம்…

  6. namma thamilan says:
    August 15, 2007 at 12:31 pm

    hey who is this unkal thamilan?

  7. த.அகிலன் says:
    August 16, 2007 at 8:28 am

    பாலாண்ணா ஏன் பாவம் தூயா?

  8. தூயா [Thooya] says:
    August 18, 2007 at 2:28 am

    பாலாண்ணாவை எப்பவும் கலாய்க்கிறார்கள்…அண்ணனை பாதுகாக்க நான் ஒரு புது சங்கம் ஆரம்பிக்க போறேன்..

  9. ♠ யெஸ்.பாலபாரதி ♠ says:
    August 18, 2007 at 5:29 am

    அடப்பாவி.. அடங்க மாட்டியா நீயு..!

    🙁

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  10. த.அகிலன் says:
    August 18, 2007 at 12:09 pm

    //தூயா [Thooya] said…
    பாலாண்ணாவை எப்பவும் கலாய்க்கிறார்கள்…அண்ணனை பாதுகாக்க நான் ஒரு புது சங்கம் ஆரம்பிக்க போறேன்.. //

    அந்த சங்கத்தை கலாச்சும் ஒரு பதிவு போடுவன் தூயா.

    //♠ யெஸ்.பாலபாரதி ♠ said…
    அடப்பாவி.. அடங்க மாட்டியா நீயு..!

    🙁

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் தல.

  11. ப்ரியன் says:
    August 17, 2009 at 10:02 pm

    அகிலன் , இப்போது பாகச பொலிவு இன்றி இருப்பது மாதிரி ஒரு தோற்றம்…மீண்டும் ஒரு பதவு போடுங்க…இது மாதிரி 😉

  12. thaya says:
    August 25, 2009 at 8:00 am

    hi agiilan. you are grate.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • அனுபவம்
  • எண்ணங்கள்
  • ஒலிக்கவிதைகள்
  • ஒலிப்பதிவுகள்
  • கவிதைகள்
  • காதல் சிலுவையில்
  • குளிரடிக்கிற ஏரியா
  • சினிமா அனுபவம்
  • நேர்காணல்
  • புகைப்படம்
  • புத்தகம்
  • September 2024
  • June 2021
  • November 2019
  • March 2019
  • April 2018
  • May 2013
  • February 2013
  • December 2012
  • October 2012
  • July 2012
  • June 2012
  • November 2010
  • August 2010
  • June 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
  • June 2007
  • May 2007
  • December 2006
  • November 2006
  • October 2006
  • September 2006
  • August 2006
  • July 2006
  • June 2006
©2025 த.அகிலன் | WordPress Theme by SuperbThemes