எனது கவிதைக்குள் ஒழிந்திருக்கிறது திசையறியாப்பறவையின் சிறகுகளின் தத்தளிப்பு.. உள்ளோடும் சொற்களினதும் வாக்கியங்களினதும் அர்த்தங்களை நான் மறந்துவிட்டேன் இறகினைப்போல் அலைந்து கொண்டிருக்கிறது கவிதை திசையறியாப் பறத்தலின் தவிப்பில் உதிரும் இலைகளைப் பின்பற்றியபடியிருக்கிறது மனம் எனை ஏந்திக்கொண்டிருப்பது காற்றின் எந்தக்கிளை
Category: கவிதைகள்
சலிப்பு…
யாரும் புரிந்து கொள்ளவியலா? ஜடமாகவே இருந்துவிடுகிறேன் நான்…… காலம் என் கைகளில் திணித்துப்போன… நிறமற்ற கனவுகள்… எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்… தேவதைகள் யாருமற்ற எனது நிலத்தில் சருகுற்று… பேய்கள் வசிக்கட்டும்…. எப்போதேனும்… கொலுசுகளோடு வரும் யாரோ ஒருத்தி கண்டெடுக்கக் கூடும்… சருகுகளினடியில்…. சிக்குண்டு போன… யாரும்படிக்காத… எனது புத்தகத்தின்… இறுதிப் பக்கங்களை…..
கேவலமான பிரார்த்தனையும் துயரவியாபாரமும்…
01. என் சனங்களின் பசியை எழுதும் இந்த வார்த்தைகளின் வெட்கத்தையும் துயரையும் நீ அறிவாயோ இறைவா? எனது குழந்தைகளின் இரவுகளை தயைகூர்ந்து வெடிச்சத்தங்களால் நிரப்பாதிரும்.. இரண்டு துப்பாக்கிகளுக்கிடையில் மிரள்கிற அவர்களின் மழலைச் சொற்களின் அச்சத்தை விலக்கும்.. என் சனங்கள் பாவம் முன்னொரு போது போரினின்று நான் வெளியேறுகையில் ஒன்பதாம் திசையில் வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை அவர்களுடைய வானத்திலேயும் ஒளிரச்செய்யும் என் ஆண்டவரே.. 02 என்னிடமிருக்கும் இந்தச் சொற்கள் சுயநலமிக்கவை…. பதுங்குகுழியின்…