சாத்திரக்காரர்கள் தலைமறைவானார்கள். சனங்களின் பெரும்பிணி சாத்திரியின் பரிகாரங்களில் தீராதென்பதை சாவு சனங்களை நெருக்கிய மலந்தோய்ந்த கடற்கரையில் பிணங்கள் மிதந்த கடனீரேரிகளில் தம்மை நோக்கி இரண்டு பக்கங்களிலிருந்தும் குறிபார்த்துக்கொண்டிருந்த துப்பாக்கிகளை அஞ்சிய இரவில் சனங்கள் கண்டுகொண்டார்கள். சனங்களோடு சனங்களாய் தப்பியோடும் அவசரத்திலும் சாத்திரக்காரர்கள் பரிகாரப் புத்தகத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு மறந்திருக்கவில்லை. போகுமிடம் எப்படியோ? சூரியன் மேற்கில்தான் உதிக்குமோ? நிலவு பகலில்க் காயுமோ? போன பின்னர் பார்க்கலாம். முக்காடிட்டபடி தமக்கு முன்னர் ஓடித்…
BROTHERHOOD OF WAR
வெறுமனே எதிர்முனை இரையும் என் கேள்விகளின் போது நீ எச்சிலை விழுங்குகிறாயா? எதைப்பற்றியும் சொல்லவியலாச் சொற்களைச் சபித்தபடி ஒன்றுக்கும் யோசிக்காதே என்கிறாய்.. அவன் இறப்பதற்கு சில மாதங்கள் முன்னதான தொலைபேசி உரையாடலின் பின் எழுதிய வரிகள் அவை. யார் முதல் பற்றிங்? யார் சைக்கிள் ஓடுவது? யார் எடுத்திருக்கிறது பெரிய வாழைப்பழம்? இப்படி எதற்கெடுத்தாலும் சண்டைபிடித்துக்கொண்டேயிருந்தோம் சண்டை பிடிக்கவே பிறந்தது போலச் சண்டை, ஜென்ம விரோதிகளைப் போல. அவன் ஒரு…
கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும்
“தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” – பைபிளிலிருந்து பொங்குதமிழ் இணையத்தில் வெளியான அனுபவங்களின் காயத்தினை கேள்வி ஞானத்தினால் கண்டடைய முடியாது என்னும் என்னுடைய கட்டுரைக்கு பதிலாக யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதைப் பதில் கட்டுரையாகப் பார்ப்பதா அல்லது சேகுவேரா நுழைந்தேயிராத கிறிஸ்தோபரின் வீடு என்ற தன் முன்னைய கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் என்னென்ன சொற்களை…