இரண்டு
சிவப்பு வெளிச்சங்களிற்கு
மேலாலெழும் நிலவு
அன்றைக்கு மிருந்தது.
ஒரு
விதவைத்தாயின்
இளைய மகனை
அவர்கள் களவாடிப்போன
இரவில்…
பைத்தியக்காரியைப்போல்
தலைவிரி கோலமாய்
தெருவில் ஓடிய
அவளைச் சகியாமல்
மேகங்களினடியில்
முகம் புதைத்துக்கொண்டது.
பின்பொரு மழைநாளில்
அலைகளின் மேல்
ஒருவன் ஏறித்தப்புகையில்…
இராமுழுதும் துணையிருந்தது…
யாரும்
விசாரணைகளை நிகழ்தும் வரை
எல்லாவற்றினதும்
மௌனச் சாட்சியாய்
அலைந்து கொண்டேயிருக்கும்
அது.
நிலவு…
மேகப்போர்வையால் மூடிக்கொண்டு துயிலுறும் ராத்திரிகளிலும் அத்தனை அநீதிகளையும் அப்பட்டமாய்க் காணும்.
ஆனால் எதற்கும் பயனற்றதாய்…
வீணாய்ப் போனதாய்…
Nilavu….
very nice poem
nilavu endrum maunaththaye kadai pidithuvida kuudaadu.I enjoy it.