புகைப்படம் – த.அகிலன் செஞ்சோலைக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும் போயிருந்தோம். எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோஅப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான்எப்படிப்படமெடுக்க வேண்டு மென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியைஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயது அக்கா சீ 7 வயது தாய். மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ…
Month: August 2007
சுயவிசாரணை….
என் அடையாளம்குறித்த கேள்விகள்கிளம்புகின்றனபூதாகாரமாய்… அப்பனுக்கும்அம்மைக்கும்ஆயிற்றுஉயிரும் உடலும். எனதுபுன்னகைகையைகாலம் கொண்டேகிற்று. என்னிடம் எனக்கென்றுஏதுமில்லை. உனதுமுத்தங்களையும்நினைவுகளையும் கூடநீயேசொந்தங் கொண்டாடுகிறாய். யாரோடும் பகிர முடியாது போனபுன்னகையும்முத்தங்களும்துயரங்களும்என்னுடையவைதானென்றுயாருக்குத்தெரியும்? என் வார்த்தைகளின்அர்த்தம் கூடஎனதாயில்லை. மறுக்கமுடியாத்துயருள்மூழ்கியஎனது கவிதைகள்என்னின்று அகன்றன. இப்போதுஎனக்குள்கேள்விகளை நிரப்புகிறதுதனிமை. புன்னகைக்கும்வேதனைக்கும்இடையிலான தூரங்கள்நீண்டபடியிருக்கின்றன…. ஆங்காங்கேவிரிந்தபடியிருக்கும்காலத்தின் கண்ணிகளில்..வீழ்ந்தபடியிருக்கும்எனது பாதங்கள்…. ஏதேனும் ஒருபொழுதில்முளைக்கும்அழத்தோன்றாவொருமனக்காந்தல்உனதுமுத்தங்களிற்காய் ஏங்கும். ஒரு பொழுதின்துயருள் தோன்றிஎழுதவியலாது போனகவிதை வெறுமையைநிரப்புகிறது மனசுள். நினைவறையின் மடிப்புகளினின்றும்பறப்படுகின்றனஇன்னும்பகிரப்படாத்துயரங்கள்அழுவதற்கானவெட்கங்கள் ஏதுமற்று…இரண்டு வருடங்களிற்கு முன்பு ஒரு தூக்கமற்ற இரவில்…