நிழலுருவில் வசந்தம்நிஜம்ஒளியின் எத்தொலைவிலோ ஒளியின் தொலைவைவிரட்டும் என்காலம்வழிநெடுகஇருளின் கரங்கள்என் விழிமறைக்கும் என்வயசையும்மீறிமனம் கொதிக்கும்அதன்தகிப்பில்என் கரம் எரித்து ஒளி படைத்தேன் உயிர் உருக்கிவழி கடந்தேன்வலியையும்… இருள்சொன்னதுநீ வயசுக்கு மீறியவன்நான் சொன்னேன்இன்னும் இருக்கிறார்கள்வயசுக்கு மீறியவர்கள்.. த.அகிலன்
Month: September 2006
பாழடைந்து போகும் நகர்
வெம்பிய நகரின்கானல்நீர்மிகும் தெருக்களில்மழையின் தேவதைகள் யாரும்வருவதற்கில்லை குரல்களற்றமனிதர்களின்கண்கள் ஒளியற்று மங்கின நகருக்குள்தாகித்தலையும்சாத்தான்கள்பெருநகரின்கானல்நீரள்ளிப்பருகிதெருக்களில்வேட்டையாடித்திரிந்தன… இறுதியிலும் இறுதியில்தேவதைகளின் சாபம்நகரின் ஓளிவிழுங்கபாழடைந்து போகிறதுநகர்…. த.அகிலன்
நினைவுகள் மீது படியும் நிழல்…
எனை விலகிபுல்லின்நுனியில் இருந்து ஒரு பறவையைப்போல்எழுகிறதுஉன் முத்தத்தின்கடைசிச்சொட்டு ஈரமும் நான்புதினங்கள்அற்றுப்போனசெய்தித்தாளைப்போலாகிறேன்நீயிராப்பொழுதுகளில்.. மழைநின்றமுற்றத்தில்உன்காலடித்தடங்களற்ற வெறுமைநிழலெனப்படிகிறதுநம்நினைவுகளின்மீது த.அகிலன்