(1) ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது தகிக்கும் சுவர்களிடமிருந்து தப்பித்த மனோநிலையைப் பெறுவதற்காக இன்றைய இரவுக்கு ஒரு படத்தை பார்த்து விடுவதென்று தீர்மானித்தேன். தகிப்பிலிருந்து என்னை விடுவிக்கும் தன் குளுமையான காட்சிகளால் எனை விழுங்கியது tha king of masks திரைப்படம். ஒரு திருவிழா இரவில் எங்கும் வாணவேடிக்கை நிகழந்து கொண்டிருக்க. ஓரமாய் தன் குரங்கோடு ஒரு கிழவர் வித்தைகாட்டிக் கொண்டிருப்பார். அவரிடம் நிறைய வித்தைகள்…
Month: May 2008
இன்றைய FM வானொலிகளில் நிகழ்த்தப்படுவதற்குப் பெயர் அறிவிப்பா? – இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் எஸ்.எழில்வேந்தன்
ஹலோ! வணக்கம் யார் இது. நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன். உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ? ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம். ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க? போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப் போடுங்கோ யார் யாரெல்லாம் கேக்கிறீங்க.. மச்சாள் அன்னபூரணி அவான்ர…
தண்டவாளத்து வண்டவாளங்கள்…..
“வண்டி வண்டி புகைவண்டி வாகாய் ஓடும் புகைவண்டி கண்டி காலி கொழும்பெல்லாம் காணப்போகும் புகைவண்டி. சுக்குப் பக்குக் சுக்குப் பக்சுக் கூகூகூகூகூகூகூகூகூ” புகைவண்டியாகத்தான் எனக்கு இரயில் பழக்கமானது. ஆனாலும் இந்தப்பாடலைக் கேட்பதற்கு முன்னாலேயே நான் இரயிலில் பயணித்திருப்பதாக அம்மா பின்னாட்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நினைவிருப்பது இந்தப்பாடலை பாடிக்கொண்டு நாங்கள் பாலர்வகுப்பு மரத்தை ஒருவர் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டு சுத்தி வந்தது தான். எங்கள் வீட்டில் அம்மாவையும் அப்பாவையும்…