எப்போதும் ஏதேனுமொரு புன்னகையிலிருந்தே ஆரம்பிக்கிறது துயரம். ஓரு புன்னகையில் இருந்து மற்றுமோர்புன்னகைக்கு… வழிநெடுக புன்னகைகளை வாரியணைத்தபடியும் ஒவ்வொரு புன்னகையின் முகத்திலும் தன்னை அறைந்தபடியும் பயணிக்கிறது துயரம்… அது தன் தீராக்காதலோடு தொடர்ந்தும் இயங்கும் இன்னொரு புன்னகையைநோக்கி த.அகிலன்
Month: July 2006
தோற்றுப்போகும் சேவல்..
சிக்கிக் கொள்கிறதுவார்த்தைகள்….. வெறுமனேஇறக்கைகளைவீசிதோற்றுப்போகிறதுசேவல். சூரியன்அதன்பாட்டுக்கும்நகர்ந்து போகிறது உதிரியாய்உள்ளே நுழைகிறவார்த்தைகளிடம்கவிதையில்லை காற்றுக்குப் படபடத்துமேசையினின்றும்உதிர்ந்து விழுகிறதுதாள்கள்…. வெறுமனேஇறக்கைகளைவீசிதோற்றுப்போகிறதுசேவல் த.அகிலன்
கடனுக்கு வரும் கனவுகள்…
என் இனிய காலமேஎனது கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறாய்…. நான்எப்போதும் தாகமாயுணர்கிறேன் ஒரு பெருநதியின் எதிரிலும்… பூக்களின் வாசனை எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறதோஅங்கேயே என் கனவுகளும்;. புனிதமாயிராதஎன் கனவுகள்எப்போதும் அலைகின்றனஎன்னைச்சுற்றி நச்சரித்தபடி.. ஆனாலும்கனவுகளைக் கடைசிவரைசேமிப்பேன்தூக்கங்களற்றஒரு பெருவெளிக்காய்அற்றைக் கடன்கேட்டு யாரேனும் வரலாம்.. த.அகிலன்