காதல்ஒரு நதியின் நடனத்தைப்போலமேகத்தின் பயணத்தைப்போலஇலக்குத்தேடியலையும்வேட்டைக்காரனாய்இதயத்தை நெருங்குகிறது. சூரியனின்காதல்மரங்களின்பசிய இலைகளில்வழிகிறது. நிலவின்காதல்முற்றத்தில் பொழிகிறது கருணையோடு குழந்தையின்காதல்ஒரு புன்னகையில் இப்படியே இறுதியில் துளித்துளியாய்பிரபஞ்சம்காதலால்நிரம்பி வழிகிறது. பூக்களின்இரகசிய முத்தங்கள்காற்றில் கரைந்துகன்னங்களை வருடுகிறது.. த.அகிலன்
Month: July 2006
தீர்ந்து போகும் வெளிச்சம்…
நிபந்தனைகளுக்குள்இருக்கிறது உலகம்… ஒன்றிற்காய்இன்னொன்றுஅதற்காய் மற்றொன்று இப்படியே வாழ்வின் ஒவ்வோர் அசைவும்நிரம்பியிருக்கிறதுநிபந்தனைகளுள்.. நம்பிக்கையின்கடைசிப்புன்னகையும்சலனமற்றிருக்கிறது. காலம்திணைகள்எதுவுமற்றமழலையின் மொழியெனநகரும் வாழ்க்கை நினைவுகளின் நீட்சியில்என் நெஞ்சுறுத்திக்கிடக்கிறதுமுட்கள் திரையிடப்பட்டிருக்கிறதுஒவ்வோர்புன்னகையும்பணிதலும் கூட மின்மினிகளுமற்றஇந்த இரவின்துணைவன்யார்? இன்னும்யாரிடமாவது மிச்சமிருக்கிறதாவெளிச்சம்.
காயங்கள்
வெற்றுக்கண்களுக்குச் சிக்கிவிடாமல்;காயங்கள்நிறைகின்றனமேனியெங்கும்உணர முடிகிறது என்னால்….. ஒரு புன்னகைஒரு முத்தம்அல்லதுஒரே ஒரு பார்வையின்பகிர்தல்கூடப்போதுமானதாயிருக்கும்அவற்றை ஆற்றிவிட ஆனால்நண்பர்களேநிச்சயமாய்பலிகள் தேவையில்லை பூக்களின்செண்டுகளில் இருந்து கத்திகளை எடுங்கள்காயங்கள்இனியும் வேண்டாம்.. த.அகிலன்