கூரையின்முகத்தில் அறையும்மழையைப்பற்றியஎந்தக்கவலையும் அற்றதுபுது வீடு இலைகளை உதிர்த்தும்காற்றைப்பற்றியும்இரவில் எங்கோகாடுகளில் அலறும்துர்ப்பறவையின் பாடலைப்பற்றியும்எது விதமான துயரமும் கிடையாதுபுது வீட்டில் ஆனாலும் என்னஅதன் பெரியயன்னல்களினூடேநுழையும்நிலவிடம்துளியும் அழகில்லை…… த.அகிலன்
Month: June 2006
புன்னகையின் பயணம்
சூரியன்தன் ரகசியங்களோடுநுழைகின்றான் எங்கும்விசாரணைகள் ஏதுமின்றிஎங்கும் நிரம்பிவழிகிறதுசூரியனின் ரகசியங்கள்காற்றுக்குக்கேள்விகளுமில்லைவேலிகளுமில்லை என்னுடையதும்உன்னுடையதும்கனவுகளுக்கும் கூடரகசியம் கிடையா எனதுமுற்றத்தில் விழுகிறதுபச்சை வேட்டைக்காரர்களின்நிழல்….. துப்பாக்கியின்கண்களிடம்காதல் இல்லைகோபமும் கிடையாது ஒருபெருநதியின்ஆழத்தில்தொலைக்கப்பட்டு விட்ட சாவி என்னிடம்நம்பிக்கைகள் இல்லைமுதலைகளால்அதை மீட்டுவிட முடியுமென்று….. சூரியனின்தடங்களற்ற தொலைவிற்கும்காற்றால்காவுகொள்ளப்படமுடியாதசுவடுகளைக் கைவிட்ட படியும்குயிலின் குரல்வழியேபயணிக்கும்என்புன்னகையாரும் அறியாதபடிக்கு…. த.அகிலன்