எனது சொற்களை அடைத்துக்கொண்டிருப்பது எது? கைநழுவிய சொற்களா? சொற்களால் செய்யப்பட்ட கொலைவாட்களா? உதிர்ந்துபோன காலமும் மலராத கணமுமா? என் சொற்களைத் தேக்கிவைத்திருப்பது எது? அவசர அவசரமாகத் தாம் நடந்த தடங்களை அழித்தபடி வழிகாட்டிகள் திசைகளை மாற்றினர் கொலைவாட்களைப் பதுக்கியபடி நண்பர்கள் குலாவினர். read more…
Continue Reading
கண்ணா லட்டு தின்ன ஆசையா?
சாத்திரக்காரர்கள் தலைமறைவானார்கள். சனங்களின் பெரும்பிணி சாத்திரியின் பரிகாரங்களில் தீராதென்பதை சாவு சனங்களை நெருக்கிய மலந்தோய்ந்த கடற்கரையில் பிணங்கள் மிதந்த கடனீரேரிகளில் தம்மை நோக்கி இரண்டு பக்கங்களிலிருந்தும் குறிபார்த்துக்கொண்டிருந்த துப்பாக்கிகளை அஞ்சிய இரவில் சனங்கள் கண்டுகொண்டார்கள். சனங்களோடு சனங்களாய் தப்பியோடும் அவசரத்திலும் சாத்திரக்காரர்கள். read more…
Continue Reading
கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்
”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது” என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இதற்குப்பின்னால் வருகிற என்னுடைய எல்லா வார்த்தைகளும் முடிந்த முடிவுகளோ மாற்றமுடியாத தீர்மானங்களோ கிடையாது. முடிந்த முடிவுகளாக எதையும் அறிவித்துவிடமுடியாத அரசியலறிவும், இலக்கிய அறிவுமே எனக்கிருக்கிறது என்பதை. read more…
Continue Reading
கமராவுக்கு சிக்காத காலம்.
ஏ.குஞ்சம்மா இந்தப்பெயர் எனக்கு இன்னமும் நினைவிலிருப்பதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. பில் போடுற மேசையைவிடவும் கொஞ்சமே உயரம் கூடிய பொடியனாக இருந்தாலும் எந்தவிதமான சந்தேகக் குறியையும் முகத்தில் காட்டாமல் எனது முதலாவது தொழில்முறைப் புகைப்படத்துக்கு போஸ்கொடுத்த அற்புதமான பெண் அவர்.(அப்பாவிப் பெண்) . read more…
Continue Reading
பாவமன்னிப்பு
எனது சொற்களை அடைத்துக்கொண்டிருப்பது எது? கைநழுவிய சொற்களா? சொற்களால் செய்யப்பட்ட கொலைவாட்களா? உதிர்ந்துபோன காலமும் மலராத கணமுமா? என் சொற்களைத் தேக்கிவைத்திருப்பது எது? அவசர அவசரமாகத் தாம் நடந்த தடங்களை அழித்தபடி வழிகாட்டிகள் திசைகளை மாற்றினர் கொலைவாட்களைப் பதுக்கியபடி நண்பர்கள் குலாவினர். read more…
Continue Reading
காதல் சிலுவையில் 01
நீ எடுத்துச் சென்ற பிரியங்களை வேறெதனாலும் நிரப்ப முடியவில்லை.. கண்ணாடிக்குவளைகளுள் உடைந்து சிதறும்.. நுரைகளில்.. நொருக்கிக்கொண்டிருக்கிறேன் உனது பிரியத்தை.. ஒரு கணத்தில் குவளையே உன் முகமாக வீசியெறிகிறேன் அதை ஒரமாய்.. உடைந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளிலெல்லாம் பல்கிப்பெருகுகிறாய் ஏளனச் சிரிப்போடு.. நீ கொடுத்ததை. read more…
Continue Reading
காதல் சிலுவையில் 02
விளக்குகள் அணைக்கப்பட்ட கரையில் தளும்பிக்கொண்டிருக்கிற மதுக்கிண்மெனக்கிடக்கிறது கடல்.. உனது நினைவுகளெனப் பற்றியிழுத்து எனை வீழ்த்தும் திட்டங்கள் வகுக்கிறது கரைமணல்.. யாரோ ஒருத்தனின் முத்தங்களிற்கான யாரோ ஒருத்தியின் சிணுங்கலை எடுத்துப்போகிறது காற்று எனைக்கடந்து.. உனது முத்தங்களை நினைவூட்டி.. உன் சாயலை ஒத்த ஒருத்தியிடம். read more…
Continue Reading
காதல் சிலுவையில் 04
இதுவரை எழுதாத சொற்கள் கொண்டவொரு கவிதையை எழுதும் என் பிரயத்தனங்களை ஏளனம் பொங்கப் பார்த்துக்கொண்டேயிருக்கிறாய் நீ என்னுடைய வார்த்தைகளையெல்லாம் அடிமைசெய்து வைத்துக்கொண்டு. கூரையில் நிரந்தரத் தாளமெனப் பொழிந்து கொண்டிருந்துவிட்டு சட்டென்று நின்று போன மழையைப்போலப் போய்விட்டாய்.. உதிர்ந்து கிடக்கிற கொண்டல் பூக்களை. read more…
Continue Reading