புன்னகையின் பயணம்
Posted by த.அகிலன் on Jun 8th, 2006
2006
Jun 8

சூரியன்தன் ரகசியங்களோடு
நுழைகின்றான் எங்கும்
விசாரணைகள் ஏதுமின்றி
எங்கும் நிரம்பிவழிகிறது
சூரியனின் ரகசியங்கள்
காற்றுக்குக்கேள்விகளுமில்லை
வேலிகளுமில்லை
என்னுடையதும்
உன்னுடையதும்
கனவுகளுக்கும் கூடரகசியம் கிடையா
எனதுமுற்றத்தில் விழுகிறது
பச்சை வேட்டைக்காரர்களின்நிழல்…..
துப்பாக்கியின்கண்களிடம்
காதல் இல்லை
கோபமும் கிடையாது
ஒருபெருநதியின்ஆழத்தில்
தொலைக்கப்பட்டு விட்ட சாவி
என்னிடம்நம்பிக்கைகள் இல்லை
முதலைகளால்
அதை மீட்டுவிட முடியுமென்று…..
சூரியனின்தடங்களற்ற தொலைவிற்கும்
காற்றால்காவுகொள்ளப்பட
முடியாதசுவடுகளைக் கைவிட்ட படியும்
குயிலின் குரல்வழியேபயணிக்கும்
என்புன்னகையாரும் அறியாதபடிக்கு….
த.அகிலன்

June 23rd, 2006 at 8:09 pm
வலைப்பூ துவங்கியதற்கு வாழ்த்துக்கள் அகிலன்!
June 26th, 2006 at 7:57 pm
வாங்க! அகிலன் அழகிய வலைப்பதிவோடு